Sunday, September 11, 2011

1951-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட பூ.சா.கோ தொழில்நுட்பக்கல்லூரி,
தற்போது ‘’வைர விழா’’ஆண்டினைச் சிறப்பாகக் கொண்டாடும், வகையில்,
பூ.சா.கோ முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக ‘’ TECHEX 2011’’ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியினை, நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை,கோவை கொடீசியா வளாகத்தில் நடத்த உள்ளது.
இக்கண்காட்சியானது, பூ.சா.கோ.முன்னாள் மாணவர்களின், உற்பத்திப் பொருட்களின்,மூன்றாவது கண்காட்சியாகும்.
இக்கண்காட்சியின் முக்கிய நோக்கம்[ TECHEX 2011] ,பூ.சா.கோ.தொழில் நுட்பக்கல்லூரி,பல்தொழில் நுட்பக்கல்லூரி, மற்றும்,மேலாண்மைக் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின், சாதனைகளை, உலகிற்க்கு பறைசாற்றுவதற்காகவும்,தொழில் வல்லுநர்கள், மாணவர்கள்,மற்றும், விற்பனையாளர்களை ஊக்குவிப்பதற்க்காகவும், நடத்தப்பட உள்ளது
கண்காட்சியாளர்கள்:
பூ.சா.கோ.தொழிநுட்ப, பல்தொழிநுட்ப,மேலாண்மை கல்லூரியின் முன்னாள்
மாணவர்களும் தற்போதைய உற்பத்தியாளர்கள்,ஆலோசகர்கள்,வணிக ஏற்றுமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இக்கண்காட்சியில் தங்களது உற்பத்திப்பொருட்களை, பார்வைக்கு வைக்கலாம். இக்கண்காட்சியில் இயந்திரவியல்,மின்னியல்,மின்னணுவியல்,கணிணியியல்,துகிலியல், மற்றும், அனைத்து துறை சார்ந்த பொருட்களும் ,காட்சியில் அடங்கும்.

பார்வையாளர்கள் ;
புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள்,
சிறு,பெரு,வியாபார நிறுவன உரிமையாளர்கள்,மற்றும்,பொறியாளர்கள்,
கைத்தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒப்பந்ததாரர்கள்,
ஏற்றுமதியாளர்கள்,விநியோகஸ்தர்கள்,கல்வியாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,
மற்றும்,மாணவர்கள் .

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு ;
1- Technology Development Board (TDB),Department of Science & Technology (DST),Government of India, New Delhi
2- Technopreneur Promotion Programme(TePP),Department of Scientific & Industrial Reserch (DSIR),Government of India, New Delhi
3- Technology Refinement & Marketing Programme (TREMAP).Technology Information Forcasting and Assessment Council (TIFAC),Department of Science & Technology, Government of India.

மேற்கண்ட அரசு சார்ந்த நிறுவனங்கள், இக்கண்காட்சியில் ஆய்வரங்கங்கள், நடத்த உள்ளது .

சுய தொழில் முனைவோருக்கான வணிக ஆய்வரங்கம் ;
நவம்பர் 26 ஆம் தேதியன்று ’’ சுயதொழில் முனைவோருக்கான உதவி’’ எனும் தலைப்பில் ,ஆய்வரங்கம் ஒன்றை ‘’TECHEX-2011’’ கண்காட்சியில் ‘’PSG-STEP’’ நடத்த உள்ளது.

நேரம் ;
தொழிநூட்ப பார்வையாளர்கள்-------காலை 9.30 முதல் பகல் 12.00 வரை,
அனைத்துப் பார்வையாளர்கள்---------பகல் 12.30 முதல் மாலை 6.30 வரை,

அனுமதி இலவசம்.


TECHEX 2011 கண்காட்சியானது, 350 க்கும் மேற்பட்ட அரங்குகளுடன்,அமெரிக்கா,
கனடா,சிங்கப்பூர்,மலேசியா, வாழ் , பூ.சா.கோ.முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

ரா.பழனிச்சாமி,
தலைவர்- TECHEX-2011

No comments: